தமிழ்நாடு
தொகுப்பு வீடு இடிந்து விழுந்து கர்ப்பிணிப்பெண் காயம்
தொகுப்பு வீடு இடிந்து விழுந்து கர்ப்பிணிப்பெண் காயம்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சொக்கன் கொல்லை கிராமத்தில் தொகுப்பு வீடு மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி பெண் பலத்த காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சொக்கன் கொல்லை கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரின் வீட்டில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கமலக்கண்ணனும் அவரது மனைவி சரஸ்வதியும் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காகக் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒன்பது மாத கர்ப்பிணியான சரஸ்வதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.