’லிஃப்ட் கொடுத்தது குத்தமா’ பெட்ரோல் பங்கில் செல்போனை திருடிச் சென்ற நபர்! CCTV-ல் பதிவான காட்சிகள்!

நெய்வேலி என்.எல்.சி தலைமை அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் மர்ம நபர் அங்கு உள்ள ஊழியரின் செல்போனை திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பில் என்.எல்.சி தலைமை அலுவலகம் எதிரே பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு ஊழியர் சிலம்பரசன் என்பவர் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது அருகில் தனது செல்போனை வைத்துள்ளார். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் பங்கில் செல்போனைத் திருடிச் சென்றுள்ளார். பின்னர் சிலம்பரசன் தனது செல்போனைப் பார்த்தபோது காணவில்லை. இதையடுத்து, பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சியைப் பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் செல்போனை தனது லுங்கியில் மறைத்து செல்போனைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்ததில் அந்த செல்போன் திருடன் வாலிபர் ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு வந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து சிலம்பரசன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் அளித்ததன் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com