”எனக்கு கப்பல் மாதிரி வீடு வேணுங்க..” - விளையாட்டா சொன்ன மனைவி.. கட்டி அசத்திய இன்ஜினீயர் கணவர்!

கடலூரைச் சேர்ந்த இன்ஜினீயர் ஒருவர் தன் மனைவிக்காகப் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி அசத்தியுள்ளார்.

கடலூரைச் சேர்ந்தவர் சுபாஷ். இன்ஜினீயரான இவர், சரக்கு கப்பலில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ கப்பல்போல் வீடு கட்ட வேண்டும் என ஆசையாகக் கூறியதை அடுத்து, சுபாஷும் அதற்கான பணிகளில் இறங்கியுள்ளார். இதையடுத்து, கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 11,000 சதுர அடியில் ஓர் இடத்தினை வாங்கி அதில் 4 ஆயிரம் சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீட்டினை கட்டத் தொடங்கினார். கடந்த 2 ஆண்டுகளாக வீடு கட்டும் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்து புதுமனை புகுவிழா நடைபெற்றது.

பிரம்மாண்ட கப்பல் போன்று தோற்றம் உள்ள இந்த வீட்டினைச் சுற்றி தண்ணீர் நிற்கும் விதமாக வழிவகை செய்துள்ளார். வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகள் அமைத்து அதன் வழியாக 6 அறைகளைக் கட்டி இந்த வீட்டினை பிரம்மாண்டப்படுத்தி உள்ளார். இதுகுறித்து வீடியோவை இங்கு காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com