\
கூடலூர் அருகே பள்ளத்தில் விழுந்த யானை இறந்தது

கூடலூர் அருகே பள்ளத்தில் விழுந்த யானை இறந்தது

கூடலூர் அருகே பள்ளத்தில் விழுந்த யானை இறந்தது
Published on

கூடலூர் அருகே ஊருக்குள் நுழைந்து கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்த பெண் யானை இறந்தது.

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி படச்சேரி பகுதியில் பெண் யானை ஒன்று நேற்றிரவு ஊருக்குள் புகுந்தது. குடியிருப்புகள் அதிகம் உள்ள ஒரு பகுதிக்கு சென்ற யானை அங்கு சுவர் ஒன்றை உடைத்துக்கொண்டு சரிவான பகுதியில் கீழே விழுந்தது. இதில் வாயில் படுகாயம் ஏற்பட்டது. விழுந்த யானை எழுந்திருக்க முடியாமல் தவித்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் யானையை தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த முயற்சி பலனளிக்காததால் யானை இறந்தது. இந்த யானை கடந்த வாரம் சேரம்பட்டி பகுதியில் மூதாட்டி ஒருவரை கொன்றதாகவும் கூறப்படுகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com