கடலூர்: பள்ளம் தோண்டியதால் பள்ளிவாசல் மதில் சுவர் சேதம் - நடவடிக்கை கோரி இஸ்லாமியர்கள் சாலை மறியல்

திட்டக்குடியில் பள்ளிவாசல் மதில் சுவர் சேதமடையும் வகையில் செயல்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்லாமியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Road blocked
Road blockedpt desk

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன் குடிக்காடு பகுதியில் உள்ள மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசல் அருகே மதில் சுவர் பாதிப்பு அடையும் வகையில் தனிநபர் பள்ளம் தோண்டியதால் பள்ளிவாசலின் சுற்றுச் சுவர் 15 அடி கீழே விழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென திட்டக்குடி - ராமநத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Wall
Wallpt desk

இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திட்டக்குடி போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை அடுத்து ஜமாத்தார் கலைந்து சென்றனர்.

15 அடி நீள சுற்றுச்சுவர் கீழே விழுந்துள்ள நிலையில், மீதமுள்ள 30 அடி நீள சுற்றுச் சுவர் கீழே விழ வாய்ப்பு இருப்பதாக இஸ்லாமிய சமூகத்தினர் குற்றச்சாட்டி மீதமுள்ள சுவர் சேதம் அடைவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com