கடலூர்: எச்சரிக்கையை மீறி பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் பொது இடங்களில் மது அருந்தக் கூடாது என காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இதையெல்லாம் மீறி கடலூர் மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நேற்று வரை பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்தியதாக 3112 பேர் மீது கடலூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. பொது இடங்களில் மது அருந்தும் நபர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.