அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய பாஜக நிர்மல்குமார் ட்வீட் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய பாஜக நிர்மல்குமார் ட்வீட் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய பாஜக நிர்மல்குமார் ட்வீட் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

முன்னதாக டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி தமிழக பாஜக-வின் ஐ.டி.பிரிவு தலைவர் நிர்மல் குமார் ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் நேர்காணல்களும் அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தம்மை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தபாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டப்படுவதாகவும், தன்னை பற்றிய அவதூறு கருத்துகளை நீக்கிவிட்டால், இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர், முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com