\
நாளை நடக்க இருந்த சிஎஸ்ஐஆர் - யூஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைப்பு

நாளை நடக்க இருந்த சிஎஸ்ஐஆர் - யூஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைப்பு

நாளை நடக்க இருந்த சிஎஸ்ஐஆர் - யூஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on

நாளை நடக்க இருந்த சிஎஸ்ஐஆர் - யூஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. 

கல்லூரி இணைப்பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வாக சிஎஸ்ஐஆர், யூஜிசி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்களில் இந்தத்தேர்வுகள் நடத்தப்பட இருந்தன. நாளை கணித அறிவியல் மற்றும் ரசாயன அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் நடக்கப்பட இருந்த நிலையில், நிவர் புயல் காரணமாக இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. தேர்வு நடக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com