\
திருப்பூரில் தலித் குடும்பத்தை ஊர்மக்கள் காலில் விழவைத்து கொடுமை..!

திருப்பூரில் தலித் குடும்பத்தை ஊர்மக்கள் காலில் விழவைத்து கொடுமை..!

திருப்பூரில் தலித் குடும்பத்தை ஊர்மக்கள் காலில் விழவைத்து கொடுமை..!
Published on

திருப்பூரில் பஞ்சாயத்து நடத்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினரை ஊர் மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த தீத்தாம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வெள்ளாடுகள், வேறொரு சமூகத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரது தோட்டத்தில் மேய்ந்துள்ளன. அதனால், பஞ்சாயத்தை கூட்டிய சரஸ்வதி, சக்திவேல் குடும்பத்தினரை ஊரார் அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டு, 5,000 ரூபாய் அபராதம் கட்ட செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com