\
ஓஎன்ஜிசி குழாய் உடைந்து விளைநிலங்களில் பரவிய கச்சா எண்ணெய் - சம்பா பயிர்கள் நாசம்.!

ஓஎன்ஜிசி குழாய் உடைந்து விளைநிலங்களில் பரவிய கச்சா எண்ணெய் - சம்பா பயிர்கள் நாசம்.!

ஓஎன்ஜிசி குழாய் உடைந்து விளைநிலங்களில் பரவிய கச்சா எண்ணெய் - சம்பா பயிர்கள் நாசம்.!
Published on: 

ஓஎன்ஜிசி குழாய் உடைந்ததால் கச்சா எண்ணெய் முழுவதும் விளைநிலத்தில் பரவியது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

 திருவாரூர் மாவட்டம் கீழ எருக்காட்டூர் பகுதியில் விளை நிலத்தின் கீழ் பதிக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்தது. இதனால் குழாயிலிருந்த கச்சா எண்ணெய் முழுவதும் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான விளை நிலம் முழுவதும் பரவியது. இதில் 30 நாட்களான  சம்பா பயிர்கள் பாழாகின. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வயல்களுக்கும் எண்ணெய் பரவியதால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் பாழாகின. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஓஎன்ஜிசி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட வயலில் ஆய்வு செய்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com