\
சென்னையில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

சென்னையில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

சென்னையில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை
Published on

சென்னை பூந்தமல்லி சி.ஆர்.பி.எப். மையத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹரியானாவைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி வருகிறார். இவர் பூந்தமல்லி மையத்தில் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். பணியின் போது ராஜேஷ்குமார் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் அவருக்கு உயரதிகாரிகள் தண்டனை விதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த ராஜேஷ்குமார் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணிச்சுமை காரணமாக தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பதாக கூறப்படும் நிலையில் சென்னையில் வெளிமாநிலத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com