காட்டுப்பன்றிகளால் சேதமடையும் விளைநிலங்கள்

காட்டுப்பன்றிகளால் சேதமடையும் விளைநிலங்கள்
காட்டுப்பன்றிகளால் சேதமடையும் விளைநிலங்கள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தடப்பள்ளிக்கரை, சோழன்மாதேவிகரை உள்ளிட்ட பகுதிகளில் பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை. ஆழ்துளை கிணறுகள் மூலம் சாகு‌படி செய்கின்றனர். வாழை, சோளம், கரும்பு போன்றவைதான் அவர்கள் பெரும்பாலும் சாகுபடி செய்கின்றனர். அந்தப் பயிர்கள் காட்டுப்பன்றிகளால் அடிக்கடி சேதப்படுத்தப்படுகின்றன. 
அவற்றை சுட்டுக் கொல்வதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வைத்துள்ளதாகவும், அந்த விதிமுறைகளின் படி அவற்றைக் கொல்வது இயலாத காரியம் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com