திருச்சி: காவிரி ஆற்றில் சடலமாக கரை ஒதுங்கிய முதலைக் குட்டி – விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

திருச்சி காவிரி ஆற்றில் ஒருஅடி நீளமுள்ள முதலை இறந்து கிடந்தது. அதனை கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்துகிடந்த முதலை
இறந்துகிடந்த முதலை PT Desk

திருச்சி சிந்தாமணி அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையில் உள்ள மகாத்மா காந்தி படித்துறை முன்பாக மணல் திட்டுகள் காணப்படுகின்றன. அங்கு காலை, மாலைவேளைகளில் சில முதலைகள், தண்ணீருக்கு வெளியே வந்து மணல் திட்டில் ஓய்வெடுத்துச் செல்கின்றன. இதில், பெரிய முதலைகள் மட்டுமில்லாமல் அவை ஈன்றெடுத்த முதலைக் குட்டிகளும் அடங்கும். ஆனால் அந்தப் பகுதியில் முதலைகள் நடமாட்டம் உள்ளது என்பதற்கான எவ்வித எச்சரிக்கை பலகைகளும் இன்னும் வைக்கப்படவில்லை.

இறந்துகிடந்த முதலை
இறந்துகிடந்த முதலை PT Desk

இதனால் ஆபத்தை உணராத பொதுமக்கள் சிலர், தங்கள் குடும்பத்துடன் வந்து நீராடிச் செல்கின்றனர். அதேபோல் அங்கு வரும் பலரும், பொதுமக்கள் பாதுகாப்பாக குளிப்பதற்காக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை தாண்டிச் சென்று குளித்துச் செல்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாகவே உள்ளது. இந்நிலையில் அங்கு ஒருஅடி நீளமுள்ள முதலைக் குட்டி ஒன்று செத்து கரை ஒதுங்கியுள்ளது.

இதை கைப்பற்றிய வனத்துறையினர், யாரேனும் அந்த முதலைக் குட்டியை தாக்கியோ அல்லது விஷம் கொடுத்தோ கொன்றுள்ளார்களா? அல்லது முதலைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்ததா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com