\
கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும் - யூடியூப் நிறுவனத்திற்கு போலீஸ் கடிதம்

கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும் - யூடியூப் நிறுவனத்திற்கு போலீஸ் கடிதம்

கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும் - யூடியூப் நிறுவனத்திற்கு போலீஸ் கடிதம்
Published on

கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க கோரி யூடியூப் நிறுவனத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செந்தில் பாஸ்கர், சுரேந்திரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், டி.நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்தை சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க கோரி யூடியூப் நிறுவனத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், “இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் சேனல் வீடியோ வெளியிட்டுள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த சேனலை முடக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com