சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த நபருக்கு பாஜகவில் இணைந்த உடனே மாநில அளவில் முக்கியப் பொறுப்பு!

பிரபல ரவுடியாக வலம் வந்த நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பாஜகவில் பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நெடுங்குன்றம் சூர்யா
நெடுங்குன்றம் சூர்யாPT

தமிழக பாஜகவில் அடுத்தடுத்து பல்வேறு ரவுடிகள் இணைந்து வருவதாக பேச்சுக்கள் பரவலாக பேசப்படும் நிலையில், ரவுடி மயிலாடுதுறை அகோரம், மறைந்த ஶ்ரீபெரும்புதூர் பிபிஜிடி சங்கர், புளியந்தோப்பு அஞ்சலை, கல்வெட்டு ரவி ஆகியோர் வரிசையில் சென்னை வண்டலூரை அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சூர்யாவும் பாஜகவில் இணைந்து உள்ளார்.

சூர்யா மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் அவரின் மனைவிக்கு பாஜகவில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவராக பதவி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி நேற்று நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பட்டியல் அணி மாநில செயலாளர் பதவிக்கான அறிவிப்பை நேரில் அழைத்து வழங்கி உள்ளார்.

பாஜகவில் தொடர்ச்சியாக குற்றப்பின்னணி உடையவர்கள் இணைகிறார்கள் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இந்த இணைப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com