தீபாவளி பண்டிகை: சிவகாசியில் அதிகரித்த பட்டாசு விற்பனை

தீபாவளி பண்டிகை: சிவகாசியில் அதிகரித்த பட்டாசு விற்பனை
தீபாவளி பண்டிகை: சிவகாசியில் அதிகரித்த பட்டாசு விற்பனை

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

சிவகாசியில் பட்டாசுகளை வாங்க சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் மக்கள் நேரடியாக வந்தவண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு பல புது ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதுடன் அதிக தள்ளுபடி விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பட்டாசுகள் விலை 5 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் வடமாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பப்பட்டு விட்டதாகவும், தடை விதிக்கப்பட்ட 4 மாநிலங்களிலும் பட்டாசு விற்பனை அனுமதிக்கப்பட்டால் பட்டாசுகள் தேங்காது என்றும் கூறியுள்ளனர். பட்டாசுகள் விற்பனை ஆன்லைன் மூலமும் நடைபெற்று வருகிறது. முறையாக அனுமதி பெற்ற விற்பனையாளர்களிடம் மட்டும் ஆன்லைனில் பட்டாசுகளை வாங்கும்படி பட்டாசு தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com