``போகிறபோக்கில் எதையாவது தமிழிசை சொல்ல கூடாது”- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

``போகிறபோக்கில் எதையாவது தமிழிசை சொல்ல கூடாது”- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
``போகிறபோக்கில் எதையாவது தமிழிசை சொல்ல கூடாது”- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

இந்தியாவில் பாசிச சக்தியாக இருக்கும் பா.ஜ.க.வை துடைத்தெறிய நவம்பர் புரட்சி நாளில் உறுதியேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் க. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு திநகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தலைமை அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் க. பாலகிருஷ்ணன், முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று நவம்பர் புரட்சி தின முழக்கங்களை எழுப்பி இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

இதன் பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “இந்தியாவில் பாசிச சக்தியாக இருக்கும் பா.ஜ.க.வை துடைத்தெறிய நவம்பர் புரட்சி நாளில் உறுதியேற்போம். சாதி மதவெறியை உருவாக்கி இந்தியாவை கூறு போடும் வேலையை செய்யும் பா.ஜ.க. அரசை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் அணிதிரள வேண்டும். ஏழைகளை காவு கொடுத்து அதானி, அம்பானிகளை மேலும் பணக்காரர்களாக மாற்றும் இந்த மத்திய அரசை எதிர்த்து தொழிலாளர்கள் ஒன்று திரள உறுதியேற்போம்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு மக்களுக்கு சுமை தான். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என தமிழக அரசு உயர்த்தியுள்ள கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக அரசு குறித்து போகிற போக்கில் ஏதோ கருத்தை சொல்ல வேண்டும் என்று தமிழிசை சொல்லக் கூடாது. இந்த அரசை விமர்சிக்கும் முன் அரசிடம் என்ன இவர்கள் கலந்து பேசினார்கள்? காவல்துறை, நீதிமன்றம் என்ன கூறினாலும் அதை ஏற்கமாட்டோம் என்கிற நிலையில் தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். ஒரு அரசியல் கட்சியோ, இயக்கமோ அல்ல. அது ஒரு மதவெறி அமைப்பு. அதனால் தான் பேரணிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என வலியுறுத்தினோம். ஆனால் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இப்போது அதையும் ஏற்காமல் உச்சநீதிமன்றம் செல்கிறோம் என்கிறார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com