“ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும்” - பாலகிருஷ்ணன்

ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
CPM balakrishnan
CPM balakrishnanpt desk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

RN.Ravi
RN.Ravipt desk

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழகத்தில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழக முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள ஆளுநர் எல்லை தாண்டி செயல்படக் கூடியவராக இருக்கிறார். மேலும் அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக, கவர்னர் மாளிகையை ஒரு போட்டி அரசாங்கம் போல நடத்துவதற்கு, சிபிஎம் கட்சியின் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநர் மீது மத்திய அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஎம் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடக தேர்தலை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஒரு நல்ல செய்தி வரும் என தகவல் தெரிகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வந்திருக்கிறது.

CM stalin
CM stalinpt desk

பொதுவாக பாஜக அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைக்காது என்பது ஒரு நல்ல செய்தி. தற்போது நடைபெறுகிற எல்லா மாநில தேர்தல்களிலும், பல மாநிலங்களில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதை பார்க்க முடிகிறது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com