\
cpi veerapandian  says about be part in TVK cabinet
மு.வீரபாண்டியன் x page

தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட்.. உறுதியாய்ச் சொன்ன மு.வீரபாண்டியன்!

தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெறும் எனவும், அதற்கான காலம் நெருங்குகிறது எனவும் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Published on

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அதிக இடங்களைப் பெற்ற தவெக, விசிக, காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல். கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதில், கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர, பிற கட்சிகளுக்கு அமைச்சரவையில் தவெக அரசு இடம் கொடுத்துள்ளது. அதேநேரத்தில், அமைச்சரவையில் பங்கு கேட்காத கம்யூனிஸ்ட்கள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்திருந்தன. இந்த நிலையில், தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெறுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பதிலளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “அந்த சூழல் வரும். இந்த மண்ணில் (ஓசூரில்) இருந்துகூட கம்யூனிஸ்ட் தோழர்கள் அமைச்சர்களாக வருவார்கள். அந்த காலம் நெருங்குகிறது" என்று கூறினார். சிபிஐயும் அமைச்சரவையில் இடம்பெறும் என வீரபாண்டியன் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com