அரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து வெளியேறினார் நல்லகண்ணு

அரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து வெளியேறினார் நல்லகண்ணு

அரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து வெளியேறினார் நல்லகண்ணு
Published on

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து வெளியேறி கே.கே.நகர் பகுதியில் குடியேறினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு சென்னை தியாகராய நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில் குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய கட்டடம் வருவதால் அங்கு வசிப்பவர்களை வேறு இடத்துக்கு இடம்மாறக்கோரி மாநகராட்சி தரப்பிலிருந்து நோட்டீஸ் தரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நல்லகண்ணு, மற்ற குடியிருப்பு வாசிகளை போல தானும் அரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து வெளியேறினார். தற்போது அவர் சென்னை கே.கே.நகர் பகுதியில் குடியேறியுள்ளார்.

அரசியல் மூத்த தலைவரான நல்லகண்ணுவுக்கு அரசு குடியிருப்பு இலவசமாகவே தரப்பட்டதாகவும், ஆனால் அனைவரை போலவும் அவர் வாடகை கொடுத்தே தங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

நல்லகண்ணுவுக்கு வேறு இடத்தில் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com