தேர்தல் ஆணையத்தில் அண்ணாமலை மீது புகார்

இரவு 10 மணிக்கு மேல் விதிகளை மீறி அண்ணாமலை வாக்கு சேகரித்தார் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார்.
அண்ணாமலை
அண்ணாமலை@annamalai_k

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது, தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி 22 மாநிலங்களில் முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகமும் அடங்கும்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருகிறார் என கட்சிகள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்றிரவு 10 மணிக்கு, பாஜகவின் அண்ணமலை பரப்புரையில் ஈடுபட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை
மக்களவை தேர்தல் 2024 | “ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு அதிமுக, டிடிவி தினகரன் வசமாகும்” - அண்ணாமலை

இது குறித்த புகாரில், “ நேற்று இரவு (12.04.2024) 10 மணிக்கு மேல் தேர்தல் விதிகளை மீறி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில், ஒலிபெருக்கியில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறி வரும் அண்ணாமலை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com