\
அம்பத்தூரில் பிடிபட்ட மாடு திருடன் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

அம்பத்தூரில் பிடிபட்ட மாடு திருடன் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

அம்பத்தூரில் பிடிபட்ட மாடு திருடன் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
Published on

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே மாடு திருடியவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். 

சென்னை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள புதூர் பகுதியில் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட பசு கன்றுகள் திருடுபோயின. இதனால் பால் வியாபாரிகள் திருடர்களைப் பிடிக்க இரவு முழுவதும் காவல் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அப்பு என்பவருக்குச் சொந்தமான கன்றுக் குட்டியை திருடுவதற்காக, இருவர் ஆட்டோவிலும், ஒருவர் இருசக்கர வாகனத்திலும் வந்துள்ளனர்.

 கன்றுக்குட்டியை ஆட்டோவில் ஏற்றி தப்பிக்க முயன்றவர்களை, வியாபாரிகள் 2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்தனர். இதில் இருவர் கத்தியைக்காட்டி மிரட்டி தப்பிச் சென்றுள்ளனர். அதேசமயம் வியாபாரிகளிடம் சிக்கிய ஹர்சதுல் கான் என்பவரை, கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com