\
பசு மாடுகளை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிய மர்ம கும்பல்

பசு மாடுகளை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிய மர்ம கும்பல்

பசு மாடுகளை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிய மர்ம கும்பல்
Published on

ஆம்பூரில் 3 பசு மாடுகளை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரத்தினம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சோட்டாபாய். இவர் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த 5 மாடுகளில் 3 பசு மாடுகளை மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. விடியற் காலை வேளையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பின்னர் மாடுகள் அலறியதால் வெளியில் வந்த அப்பகுதி மக்கள் மர்ம நபர்களை விரட்டிச் சென்று பிடிக்க முற்படும்போது மர்ம நபர்கள் தப்பி உள்ளனர்.

பின்னர் பசு மாடுகளை மீட்ட அப்பகுதி மக்கள், ஆம்பூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது மாடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்து விடும் என மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 3 பசு மாடுகளையும் வீட்டிற்கே கொண்டு சென்றுவிட்டனர். தற்போது 3 பசு மாடுகளும் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. இதுகுறித்து பசு மாட்டின் உரிமையாளர் சோட்டாபாய் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com