
சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு அதிகளவில் அளிக்கப்பட்டு வந்து நிலையில், மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், எந்த மையங்களிலும் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 150 பேருக்கும், நேரடியாக வருபவர்கள் 250பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.