\
“தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை“ - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

“தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை“ - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

“தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை“ - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

தமிழகத்தில் எந்தவித தடையும் இன்றி கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி தான் என அவர் தெரிவித்துள்ளார். 

“தடுப்பூசி மருந்து வீணாகாமல் தடுக்க சுகாதார பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை. இனியும் இருக்காது. எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனைக்கு செல்வதால் படுக்கை வசதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அதோடு தடுப்பூசி குறித்த வதந்திகளும் பரவி வருகின்றன. தமிழகத்திற்கு கூடுதலாக 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியை எதிர் நோக்கி உள்ளோம்” என அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com