கொரோனா கால மகத்துவர்: மதுரை தெருக்களில் தவிக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் முதியவர்!

கொரோனா கால மகத்துவர்: மதுரை தெருக்களில் தவிக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் முதியவர்!
கொரோனா கால மகத்துவர்: மதுரை தெருக்களில் தவிக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் முதியவர்!

மதுரையில் முழு ஊரடங்கால் உணவின்றி தெருக்களில் சுற்றித் திரிந்து தவிக்கும் நாய்களுக்கு தினசரி மூன்று நேரம் உணவு அளிக்கிறார் 53 வயதான முருகன் என்னும் முதியவர்.

தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கள் வாழ்வாதாரம் இழந்த ஏழை - எளிய, ஆதரவற்ற பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் உணவு மற்றும் உணவு பொருட்களை கொடுத்து ஆங்காங்கே உதவி செய்து வருகின்றனர்.

இதேபோல் தெருக்கள் மற்றும் வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரிகின்ற நாய்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு இருப்பதால், அவற்றிக்கு உணவுகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான அவர்களில் தெருநாய்கள் உணவின்றி திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை தவிட்டு சந்தை பகுதியை சேர்ந்த 53 வயதான முருகன் என்ற முதியவர் அப்பகுதியில் ஆவின் பாலகம் ஒன்றை நடத்திவருகிறார். கொரோனா காரணமாக சாலையோரம் சுற்றித் திரியும் 300-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தம்மால் முடிந்த அளவு இறைச்சி கலந்த உணவு, தயிர் சாதம், லெமன் சாதம் என மூன்று வேளை உணவு வழங்கி வருகிறார். 

மேலும், அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் இவர் கொண்டு வரும் உணவிற்காக காத்திருப்பதாகவும் அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த முதியவரின் தன்னலமற்ற சேவையால் வாயில்லா ஜீவன்கள் அண்ணா தெரு நாய்கள் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவரை பார்த்தவுடன் துள்ளிக்குதித்து வாலை ஆட்டிக்கொண்டு அவர் வரும்போது அவரையே சுற்றி தங்களது பாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்துகின்றன. முதியவர் சிறப்பான சேவையை மதுரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

- நாகேந்திரன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com