\
‘காய்ச்சல் கருப்பன், தும்மல் சேகர்’ - மிரள வைத்த வைத்த திருமண வாழ்த்து ’ப்ளக்ஸ் பேனர்’

‘காய்ச்சல் கருப்பன், தும்மல் சேகர்’ - மிரள வைத்த வைத்த திருமண வாழ்த்து ’ப்ளக்ஸ் பேனர்’

‘காய்ச்சல் கருப்பன், தும்மல் சேகர்’ - மிரள வைத்த வைத்த திருமண வாழ்த்து ’ப்ளக்ஸ் பேனர்’
Published on

பெறியாளரின் திருமணத்திற்கு அவரது நண்பர்கள் வைத்துள்ள ப்ளக்ஸ் பேனர் பரபரப்பை ஏற்படுத்தி பேசும்பெருளாகி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரைச் சேர்ந்த பெறியாளர் ராஜ்குமார் என்பவருக்கு நடைபெற்ற திருமணத்திற்கு அவரது நண்பர்கள் வித்தியாசமான முறையில்  ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் மணமகனை தொற்றாளர் எனவும், மணமகளை தொற்றிக் கொண்டவர் எனவும் குறிப்பிட்டதோடு திருமணத்தை கோவிட்-19 என குறிப்பிட்டுள்ளனர். இனி மணமகன், போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல... மனைவியுடன் என்று பேனர் வைத்துள்ள கொலைவெறி பாய்ஸ் கிண்டலடித்துள்ளனர்.

இதைவிட ஒருபடி மேலேபோய் ப்ளக்ஸ் பேனரை அடித்தவர்களின் பெயர்கள்... நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ், கோவிட் குமார், பாசிடிவ் பிரகாஷ், வைரஸ் வசந்த், சுடுதண்ணி சுப்ரமணி, காய்ச்சல் கருப்பன், தும்மல் சேகர், ஆம்புலன்ஸ் ஆதி, கோவக்சின் சூரியா, சானிடைசர் ஸ்ரீராம் என அடைமொழியோடு அட்டகாசம் செய்துள்ளனர்.

இந்த பேனர் கொரோனா கால விழப்புணர்வு பேனரா அல்லது கோமாளித்தனமாக வைக்கப்பட்ட பேனரா என மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com