காதல் திருமணம் செய்த பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார்
காதல் திருமணம் செய்த பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார்pt desk

கோவை | ”கொலை செய்துவிடுவதாக மிரட்டுறாங்க” – காதல் திருமணம் செய்த ஜோடி எஸ்பி அலுவலகத்தில் புகார்!

கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி. பெற்றோர் கொலை மிரட்டல் விடுவதாக குற்றம் சாட்டி பாதுகாப்புக் கோரி மனு அளித்தனர்.
Published on

செய்தியாளர்: பிரவீண்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் நட்சத்திரா. இவர் கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்துவரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காதல் திருமணம் செய்த பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார்
காதல் திருமணம் செய்த பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார்pt desk

இதையடுத்து பெண்ணின் பெற்றோர் கடந்த மாதம் முதல் அந்த இளம் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண் கிருஷ்ணமூர்த்தியை திருமணம் செய்து கொண்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தார்.

காதல் திருமணம் செய்த பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார்
“விடுதலை 2.. தோழர் வெற்றிமாறனின் அந்த கருத்தில் நான் வேறுபடுகிறேன்” - நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்!

அந்த இளம் பெண்ணின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுவதாகவும், அவரது கல்லூரி சான்றிதழ்கள் அவர்களிடம் உள்ளதால் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு அதைப் பெற்றுத் தர வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com