நிவாரண அரிசி மூட்டைகளை முதுகில் சுமந்த வட்டாட்சியர் - குவியும் பாராட்டு!

நிவாரண அரிசி மூட்டைகளை முதுகில் சுமந்த வட்டாட்சியர் - குவியும் பாராட்டு!

நிவாரண அரிசி மூட்டைகளை முதுகில் சுமந்த வட்டாட்சியர் - குவியும் பாராட்டு!
Published on

கோவையில் நிவாரண பொருட்களாக வந்த அரிசி மூட்டைகளை, வட்டாட்சியர் முதுகில் சுமந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில், 'கொரோனா' காரணமாக பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்டவை தாலுகா அலுவலகங்களில் இறக்கப்பட்டன. தாலுகா அலுவகத்தில் இருந்து ரேஷன் கடைகள் வாயிலாக, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிவாரண பொருட்கள் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மினி லாரியில் வந்து இறங்கியது.

அப்போது அங்கிருந்த வட்டாட்சியர் மகேஷ்குமார், ஊழியர்களுடன் சேர்ந்து நிவாரண மூட்டைகளை முதுகில் சுமந்து அலுவலத்திற்குள் கொண்டு சேர்த்தார். நிவாரணப் பொருட்களை லாரியிலேயே காத்திருக்க வைக்காமல் உடனடியாக தானே முன்வந்து அதனை முதுகில் சுமந்து இறக்கிய வட்டாட்சியருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் வட்டாட்சியர் மூட்டை சுமந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com