கோவையில் சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு

கோவையில் சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு

கோவையில் சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு
Published on

கோவையில் கடந்த 12 ஆம் தேதி சக மாணவர்களால் தாக்கப்பட்ட ரஞ்சித் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை கல்லூரி மாணவர் ரஞ்சித், தனது நண்பர்களுடன் ரூம்மில் தங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி ரஞ்சித்துக்கும் மற்றும் அவருடன் ரூம்மில் தங்கி வந்த ஆதித்யா என்ற மற்றொரு மாணவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரின் மோதல், மாணவர்களின் மோதலாக மாறியுள்ளது. அப்போது ரஞ்சித்தை, ஆயுதத்தால் ஆதித்யா தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த ரஞ்சித் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்துள்ளனர். இருப்பினும் ரஞ்சித் மீது தாக்குதல் நடத்திய அனைத்து மாணவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி, சக மாணவர்கள் மருத்துவமனையில் திரண்டனர். போலீஸார் சமாதானம் செய்ததை அடுத்து ரஞ்சித்தின் உடலை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com