தமிழ்நாடு
குறைதீர்ப்பு கூட்டத்திற்கு ஆம்புலன்சில் வந்த பெண் காவலர்
குறைதீர்ப்பு கூட்டத்திற்கு ஆம்புலன்சில் வந்த பெண் காவலர்
கோவையில் காவலர் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்ற டிஜிபி ராஜேந்திரன், விபத்தில் சிக்கிய பெண் காவலர் இருந்த ஆம்புலன்ஸிற்கே சென்று கோரிக்கை மனுவை பெற்றார்.
கோவையில் 8 மாவட்ட காவலர்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்து 242 போலீசார் தங்கள் குறைகளை காவல் துறை தலைவரிடம் தெரிவித்தனர். அப்போது விபத்தில் அடிபட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மஞ்சுளா ஆனந்த் என்ற பெண் காவலரும் வந்திருந்தார். இதை அறிந்த டிஜிபி ராஜேந்திரன் அவர் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்துக்கே சென்று கோரிக்கை மனுவை பெற்றார்.