சிறைக்கு கஞ்சா எடுத்து வந்ததாக குற்றச்சாட்டு - சிறைக்காவலர் பணியிடை நீக்கம்

சிறைக்கு கஞ்சா எடுத்து வந்ததாக குற்றச்சாட்டு - சிறைக்காவலர் பணியிடை நீக்கம்
சிறைக்கு கஞ்சா எடுத்து வந்ததாக குற்றச்சாட்டு - சிறைக்காவலர் பணியிடை நீக்கம்

கோவை சிறையில் கைதிகளுக்கு கொடுக்க கஞ்சா எடுத்து சென்றதாக சிறைக்காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மத்திய சிறையில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் புழங்குவ‌தாக‌ எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட 7 செல்போன்கள், சிம் கார்டுகள், சார்ஜர்கள் ஆகியவை தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. 

இந்நிலையில் அங்கு சிறைக்காவலாராக பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தண்டனைக் கைதிகளுக்கு கொடுப்பதற்காக சிறை வளாகத்திற்குள் கஞ்சா எடுத்து வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறைக்காவலர் கிருஷ்ணமூர்த்தியை சிறைக் கண்காணிப்பாளர்  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com