நூதன முறையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

நூதன முறையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

நூதன முறையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
Published on

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கோவையில் தள்ளுவண்டியை இழுத்துச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக தள்ளுவண்டியில் வந்து, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூர் முகமது. இவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தள்ளுவண்டியில் தனது ஆதரவாளர்களை அமர வைத்து இழுத்துச்சென்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வண்டியை இழுத்து வந்து அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்து உள்ளார். இதுவரை 29 முறை பல்வேறு தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்து உள்ளார். குதிரை, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து நூதனமான முறையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வந்து உள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com