காற்றாலை மோசடி வழக்கு : சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை

காற்றாலை மோசடி வழக்கு : சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை

காற்றாலை மோசடி வழக்கு : சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை
Published on

கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயருக்கு காற்றாலை மோசடி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையைச் சேர்ந்த தியாகராஜனிடம் ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக சரிதா நாயர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம் சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com