தமிழ்நாடு
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு - தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு - தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு
கோவையில் 2013 ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் யாசர் அராபத் என்பவருக்கு தூக்குதண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு கோவை, அவிநாசிரோடு, ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில், சரோஜினி,54 என்பவர் நகைக்காக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட வழக்கில் கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த, யாசர் அராபத் என்பவரை, விசாகப்பட்டினத்தில் வைத்து தனிபடை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், யாசர் அராபத் குற்றவாளி என கோவை 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பு அளித்து அவருக்கு தூக்குதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் யாசர் அராபத்துக்கு தண்டனையுடன் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.