தமிழ்நாடு
“இந்தி மொழி குறித்த விண்ணப்பம் போலியானது” - கோவை மாநகராட்சி ஆணையர்
“இந்தி மொழி குறித்த விண்ணப்பம் போலியானது” - கோவை மாநகராட்சி ஆணையர்
இந்தி மொழி குறித்த பள்ளி விண்ணப்பம் போலியானது என கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷர்வன் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிவத்தில், மூன்றாவது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என்ற கேள்வி இடம் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த மாதிரி விண்ணப்பத்தை எந்த பள்ளிகளிலும் விநியோகிக்கவில்லை. இந்தி மொழி படிக்க விருப்பமா என்ற கேள்வி தற்போதைய மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இடம்பெறவில்லை. அந்த விண்ணப்ப படிவம் நான் பதவியேற்ற பின்பு வெளியிடப்படவில்லை. நான் இதை கொடுக்க உத்தரவிட்டிருந்தால் எல்லா பள்ளிகளிலும் இந்த விண்ணப்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லை. இந்த விண்ணப்பம் போலியானது” எனத் தெரிவித்தார்.