கோவை வரும் வலசை பறவைகளின் எண்ணிக்கை குறைவு : ஆய்வில் தகவல்

கோவை வரும் வலசை பறவைகளின் எண்ணிக்கை குறைவு : ஆய்வில் தகவல்
கோவை வரும் வலசை பறவைகளின் எண்ணிக்கை குறைவு : ஆய்வில் தகவல்

கோவை குளங்களில் கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டுப்பறவைகளின் வருகை 34 சதவிகிதம் குறைந்துள்ளது கணக்கெ‌டுப்பில் தெரியவந்துள்ளது.

சர்வதேச நீர்ப்பறவை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக ஆசிய நீர்ப்பறவை கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோயம்புத்தூர் நேச்சுரல் சொசைட்டி ‌என்ற அமைப்பு 2014ஆம் ஆண்டு முதல் கோவை குளங்களில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆண்டு கோவை மாவட்டத்தின் உக்கடம், வெள்ளானைப்பட்டி, அச்சங்குளம், புட்டுவிக்கி குளம், சுண்டக்காமுத்தூர், கிருஷ்ணாம்பதி, சிங்காநல்லூர், செங்குளம், செலம்வம்பதி ஏரி, முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட 27 நீர்நிலைகளில் கடந்த ஜனவரி 5 முதல் 20ஆம் தேதி வரை நீர்ப்பறவைகளை கணக்கெடுக்கப்பட்டது.

அதில், கோவை குளங்களில் 134 இனங்களை சார்ந்த 6,276 பறவைகள் இருப்பதும், இதில் 59 வகையான நீர்வாழ் பறவைகளும், 103 வகையான இதர பறவைகளும் இருப்பதும் கண்டறியப்பட்டன. குறிப்பாக வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 34 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

2017ஆம் ஆண்டு 35 வெளிநாட்டு பறவை இனங்களை சேர்ந்த 2,592 வலசை பறவைகளும், 2018ல் 35 வெளிநாட்டு பறவை இனங்களை சேர்ந்த 2,127 வலசை பறவைகளும், 2019ல் 35 வெளிநாட்டு பறவை வகைகளில் 1.846 வலசை பறவைகளும் வந்தன. ஆனால் இந்தாண்டு ஆயிரத்து 400 வலசை வரும் பறவைகளே தென்பட்டுள்ளன. கான்கீரீட் போட்டு நீர்நிலைகளின் கரைகளை உயர்த்துவது, குளக்கரையில் உள்ள செடிகளை அகற்றி குளங்களை கேளிக்கைக்கானவையாக மாற்றுவது போன்றவை, சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இந்த ஆய்வு சொல்லும் தகவலாக உள்ளதென பறவை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com