போலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி ?

போலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி ?

போலி சித்த மருத்துவரால் உயிரிழந்த கோவை மாணவி ?
Published on

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் போலி சித்த மருத்துவரால் உயிரிழந்திருப்பதாக பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் புதூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சத்யப்பிரியா. கோவை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாதவிடாய் பிரச்னை காரணமாக செல்வபுரம் பகுதியில் உள்ள மனோன்மணி சித்த வைத்திய சாலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சித்த மருத்துவ சிகிச்சையால் ஆரம்பத்தில் மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது, பின்னர், தொடர் சிகிச்சையால் மாணவியின் உள் உறுப்புகள் செயல் இழக்க துவங்கி உள்ளது. இதனையடுத்து ஆபத்தான நிலையில், கடந்த ஏப்ரல் 22ந்தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  சத்தியப்பிரியா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே சித்த மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே மாணவி உடல் பாதிக்கப்பட்டதாக, அதற்கு காரணமான சித்த மருத்துவரை கைது செய்ய வேண்டும் எனவும் செல்வபுரம் காவல்நிலையத்தில் மே1 ஆம் தேதி உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.  இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மாணவி உயிரிழந்துவிட்டார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை எனக் குற்றஞ்சாட்டி மாணவியின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பாக இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 அத்துடன் சித்த மருத்துவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனப் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். சித்த மருத்துவரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், மாணவிக்கு கொடுக்கப்பட்ட சித்த மருந்துகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர். மேலும், ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் சித்த மருத்துவமனை மீதும், மருத்துவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com