கோவை சிறுமி பாலியல் வழக்கில் கைதானவருக்கு பொது மக்கள் தர்மஅடி

கோவை சிறுமி பாலியல் வழக்கில் கைதானவருக்கு பொது மக்கள் தர்மஅடி

கோவை சிறுமி பாலியல் வழக்கில் கைதானவருக்கு பொது மக்கள் தர்மஅடி
Published on

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமாரை மருத்துவமனை வெளியே மக்கள் சரமாரியாக தாக்கினர்.

கோவையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி காணாமல் போன சிறுமி, மறுநாள் வீட்டின் அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் தொடர்பாக, 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து சிறுமியைக் கொலை செய்ததாக சந்தோஷ்குமார் என்ற இளைஞரை கடந்த 31ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். கடந்த ஆறு நாட்களாக அவர் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தார்.

இந்நிலையில் சந்தோஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்தாரா என்பதை உறுதி செய்ய இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் வெளியே வந்த சந்தோஷை, அங்கு கூடியிருந்த மக்கள் காவல்துறையினர் எதிரிலேயே தாக்கத்தொடங்கினர். 

அப்போது காவல்துறையினர் மக்களை தடுத்து அவரை மீட்டனர். தாக்குதல் நடத்திய மக்கள், ஒரு சிறுமியை இவ்வளவு கொடூரமாக கொன்றுள்ளான், இவனை எப்படி சும்மா விடுவது என ஆதங்கத்துடன் தாக்கினர். இந்தத் தாக்குதலில் அவருக்கு பெரிதாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com