\
குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை : அச்சத்தில் மக்கள்

குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை : அச்சத்தில் மக்கள்

குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை : அச்சத்தில் மக்கள்
Published on

வால்பாறை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தும் வகையில் சிறுத்தை நடமாடி வருகிறது. வால்பாறை காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாடும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் பொதுமக்கள் சிலரும் சிறுத்தையை கண்டதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

எனவே, உயிர்ச்சேதம் ஏற்படும் முன் கூண்டு அமைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால், அப்பகுதி மக்கள் அச்சத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com