\
"கோவாக்சின்" - தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை இன்று தொடக்கம்

"கோவாக்சின்" - தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை இன்று தொடக்கம்

"கோவாக்சின்" - தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை இன்று தொடக்கம்
Published on

கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான "கோவாக்சின்" தடுப்பு மருந்து மனித சோதனை இன்று தமிழகத்தில் துவங்குகிறது.

சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில், முதற்கட்டமாக கோவாக்சின் தடுப்பு மருந்து, மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்கள் உடலில் கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட இருக்கிறது.

முதற்கட்டமாக இன்று சிறிய அளவிலான டோசேஜ் உடலில் செலுத்தப்பட்டு, 14 நாட்கள் அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் எனவும் காலை 9 மணிக்கு மனித உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com