தமிழ்நாடு
தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில் குவியுது கூட்டம்
தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில் குவியுது கூட்டம்
அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலத்தில் சீசன் மீண்டும் களைகட்டியுள்ளது
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கிய சில நாட்கள் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் சீசன் மந்தமாக இருந்தது. அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைவாகவே இருந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது.
இந்நிலையில் இரு நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ரம்மியமான சூழலால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். இன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஐந்தருவி, மெயினருவியில் மழையால் தண்ணீர் அதிகரித்து இன்று அதிகாலை குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் காலை முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.