தமிழ்நாடு
குறைந்தது தண்ணீர்: குற்றாலத்தில் வியாபாரம் டல்!
குறைந்தது தண்ணீர்: குற்றாலத்தில் வியாபாரம் டல்!
குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். தென்மேற்குப் பருவமழை கைவிரித்ததால் தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் மழை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதனால், நீர்வரத்து வெகுவாகக் குறைந்து குற்றால அருவிகளில் தண்ணீர் குறைவாகவே விழுகிறது. மெயின் அருவியில் பாறையை ஒட்டியபடி தண்ணீர் விழுகிறது. இதனால், அதில் குளிக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அலைமோதி காணப்படும். ஆனால் தற்போது சீசன் களையிழந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் மக்கள், வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.