குற்றாலம் அருவியில் குளிக்க  தடை

குற்றாலம் அருவியில் குளிக்க தடை

குற்றாலம் அருவியில் குளிக்க தடை
Published on

குற்றாலம் மெயின் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து 3ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி மிகச்சிறந்த சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. இங்குள்ள அருவிகளில் குளிப்பதற்காகவே நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தொடர்ந்து 3 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com