தமிழ்நாடு
தென்காசி: கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்
தென்காசி: கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் அதிக அளவுக்கு விழுகிறது. பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நடைபாதையிலும் தண்ணீர் ஓடுகிறது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.