சனாதனம் குறித்த கருத்து - அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

சனாதானம் குறித்த பேசிய விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ. ராசாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
உதயநிதி வழக்கு
உதயநிதி வழக்குபுதிய தலைமுறை

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார். நிகழ்ச்சியின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்பு அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின்ட்விட்டர்

திமுக எம்.பி ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் ‘எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள்?’ என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

உதயநிதி வழக்கு
“வடநாட்டிலிருந்து மடப் புயல் வந்து கொண்டிருக்கிறது” - திமுக நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் விமர்சனம்

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். 9 நாட்கள் விசாரணைக்கு பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம். பி. ஆ.ராசாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இன்று தீர்ப்பளிக்கிறார்.

உதயநிதி வழக்கு
“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டம் இருக்காது” – எம்.பி ஆ.ராசா அச்சம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com