“ஆகம பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” - நீதிமன்றம்

அர்ச்சகர் பணியில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சர்கள் பணி தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், கோவிலில் பின்பற்றப்படும் ஆகமத்தின் அடிப்படையிலேயே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

temple
templept desk

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கோவிலின் ஆகமம் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்றால் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்களும், தக்கார்களும் அர்ச்சகர்களை நியமிக்க எந்த தடையும் இல்லை” என தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அர்ச்சகர் நியமனத்தில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி, ஆகம பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com