
வீடியோ கான்பரன்ஸிங் மூலம் டிடிஎஃப் வாசன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 19ஆம் தேதி காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு அக்டோபர் 16ம் தேதியான இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசகனுக்கு நீதிமன்ற காவல் இன்று முடிவடையும் நிலையில் காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் டிடிஎப் வாசனை போலீசார் ஆஜர் படுத்த வேண்டிய நிலையில், வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக டிடிஎப் வாசனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு 38/10/23 வரை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என் ஒன்று நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்