\
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு  - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Published on

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மணிகண்டன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜூலை மாதம் நிபந்தனை ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

இந்நிலையில் தன்னிடம் பணம் பறிக்க முயன்றபோது இணங்காததால், நடிகை சாந்தினி பொய் புகார் அளித்துள்ளதாகவும், தமக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, இது தொடர்பாக அடையாறு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர், நடிகை சாந்தினி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com