கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்தும் விவகாரம் – நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்தும் விவகாரம் – நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்தும் விவகாரம் – நீதிமன்றம்  முக்கிய உத்தரவு

கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'விருதுநகர் மாவட்டம், வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்னையுமின்றி சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கோயில் பொங்கல் திருவிழாவை ஆகஸ்ட் 19 முதல் 20 வரை நடத்துவதற்கு திட்டமிட்டு, காவல்துறையிடம் அனுமதி கோரினோம். ஆதற்கு இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆனால், கோயில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற்றால் போதும்.

இந்த வழக்கை பொறுத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே, சட்ட ஒழங்கு பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை' எனக்கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com